×

செயின்ட் பால்ஸ் கல்லூரியில் நடந்த கோ-கோ போட்டியில் மாணவிகள் அசத்தல்

கோவை,பிப்.20: கோவை செயின்ட் பால்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த கல்லூரிகளுக்கிடையிலான  கோ-கோ போட்டியில் விளையாட்டு திறனை வெளிப்படுத்தி மாணவிகள் அசத்தினர்.கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூரில் உள்ள செயின்ட் பால்ஸ் மகளிர் கல்லூரி சார்பில் கோவை மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கிடையிலான மாணவியர் பிரிவு கோ-கோ போட்டி நடந்தது. இதில் 11 கல்லூரி அணிகள் பங்கேற்றனர். போட்டிகளை கல்லூரி முதல்வர் இனிதா துவக்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவிகள் தங்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்தி அசத்தினர். கோவை நிர்மலா மகளிர் கல்லூரி அணி முதலிடத்தையும், கோபி கலை அறிவியல் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் இனிதா, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ஆகியோர் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர். முடிவில் முதலாமாண்டு கணினித்துறை மாணவி ஜாஸ்மின் நன்றி தெரிவித்தார். போட்டிகளை கணிதத்துறை துணைப்பேராசிரியை ஆரேஷ், வணிகவியல்துறை துணைப்பேராசிரியை பத்மபிரியா, உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


Tags : St Paul's ,
× RELATED குழந்தை பிடிக்க வந்த ஆசாமி என நினைத்து...