×

பஸ்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு கட்டுபாடு

கோவை, பிப்.20: கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 43 டெப்போக்கள் மூலமாக தினமும் 3,250 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  400க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்களில் பயணிகளை ஏற்றி இறக்குவது, சீட்களில் உட்கார வைப்பது, சரியான நேரத்திற்கு இயக்குவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது. அரசு பஸ்களில் கியர் பாக்ஸ் பேனட் மீது பெண்கள் உட்கார அனுமதிக்கக்கூடாது. டிரைவர் சீட்டின் அருகே கியர் ராடு பக்கத்தில் பெண்கள் நிற்க அனுமதிக்கக்கூடாது. பெண் பயணிகளிடம் பேசி கொண்டே பஸ் ஓட்டக்கூடாது. நடுரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக பஸ்களை நிறுத்தக்கூடாது. பஸ் ஸ்டாப் முன் பஸ்களை நிறுத்தவேண்டும். பஸ் பாஸ் வைத்துள்ளவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்கக்கூடாது. குறிப்பாக பாஸ் வைத்துள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஏறுவதை பஸ்களை தள்ளி நிறுத்தக்கூடாது. விபத்து ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கை கூடாது. முறையான சில்லரை பயணிகளுக்கு வழங்கவேண்டும்  என போக்குவரத்து கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து கழகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : buses driver ,conductors ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...