ஆதார் அட்டை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

சோமனூர்,பிப்.20: சோமனூரில் உள்ள தபால் நிலையத்தின் சார்பில் புதிய ஆதார் அட்டை பெறுபவர்களுக்கும், பிழை திருத்துவதற்குமான சிறப்பு முகாம் இன்று துவங்குகிறது.சோமனூர் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.ஆதார் அட்டை புதிதாக அமல்படுத்தியபோது சோமனூர் பகுதியில் 90 சதவீதம் குளறுபடிகளுடன் முகவரி தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. இவற்றை சரிசெய்யும் முகாம் சோமனூர் தபால் நிலையத்தின் சார்பில் சோமனூர் கத்தோலிக்க தேவாங்கர் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (20 மற்றும் 21ம் தேதி) நடைபெறுகின்றது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டையில் உள்ள எந்த பிழைகளையும் நீக்குவதற்கு உரிய ஆவணங்களுடன் ரூ. 50 கட்டணம் செலுத்தவேண்டும். புதிதாக ஆதார் அட்டை எடுப்பதற்கு இலவசமாக விண்ணப்பித்து பொதுமக்கள் பயன் அடையும்படி தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: