வாசவி மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா

ஈரோடு, பிப்.20:  வாசவி மெட்ரிக் பள்ளியின் 23வது ஆண்டுவிழா பள்ளி இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி பங்கேற்று அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில், கௌரவ விருந்தினராக பங்கேற்ற மாவட்ட பதிவாளர் (தணிக்கை) பிரகாஷ், பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி செயலாளர் சௌபாக்கியா வி.ராஜேந்திரன் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். இதையடுத்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பள்ளி முதல்வர் புஷ்பலதா நன்றி தெரிவித்தார்.

Related Stories: