மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட முடிவு

ஈரோடு, பிப்.20:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1ம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை இளைஞா எழுச்சிநாளாக கொண்டாட திட்டமிடப்பட்டு அதற்கேற்ப பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பிரிவு, மகளிர் அணி போன்ற பல்வேறு அணிகளின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மருத்துவ அணியின் சார்பில் தொற்றாநோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் பிரமாண்ட மாரத்தான் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வார்டுகள், ஒன்றிய பகுதிகள், நகர, பேரூராட்சி பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக கொடியேற்றி வைத்து இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஏப்ரல் 15ம் தேதி வரை 410 இடங்களில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஈரோடு மாநகர பகுதிகளில் ஆங்காங்கே வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது. பிளக்ஸ் போர்டு வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தி.மு.க. சார்பில் சுவர் விளம்பரங்கள் அதிகளவில் எழுதப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து சுவர் விளம்பரம் இடம் பெற்றுள்ளது.

Related Stories: