10ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்.24ம் தேதி துவக்கம்

ஈரோடு, பிப்.20: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு பிப்.24ம் தேதி முதல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கி, ஏப்.13ம் தேதி நிறைவு பெறுகிறது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 25,809 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு வரும் 24ம் தேதி துவங்கி 26ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.இதுகுறித்து பள்ளிகல்வித்துறையினர் கூறுகையில்,`அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அறிவியல் பாடம் தொடர்பாக 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே செய்முறை தேர்வு நடக்கும். மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 பள்ளிகளில் மட்டும் உரிய வசதி இல்லாததால் அருகில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். செய்முறை தேர்வு நடத்தும் ஆசிரியர், ஆசிரியைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளியில் ஆசிரியர்கள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்’ என்றனர்.

Related Stories: