×

திருமயம் பள்ளி அருகே சேதமடைந்த மினி குடிநீர் தொட்டி சரிசெய்ய கோரிக்கை

திருமயம், பிப்.20: திருமயம் அருகே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாததால் மாணவர்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் அரசு உதவிபெறும் உயர் நிலைப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடிநீர், சாப்பிட்ட பாத்திரம் கழுவ வசதியாக பள்ளியின் வாசலில் ஒரு சிறு மின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இதனிடையே கடந்த பல மாதங்களாக குடிநீர் தொட்டி பழுதடைந்து குடிநீருக்காக தண்ணீர் நிரப்புவது நிறுத்தப்பட்டது.இதனால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நமணசமுத்திரம் பள்ளி அருகே பழுதடைந்து காணப்படும் குடிநீர் தொட்டியை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : school ,Tirumayam ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி