×

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் சாலையால் பொதுமக்கள் அவதி சீரமைக்க கோரிக்கை

கொள்ளிடம்,பிப்.20: கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் வலது கரை கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து பனங்காட்டாங்குடி கிராமம் வரை மிகவும் மோசமாகவும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. ஆற்றின் கரையோரமுள்ள குத்தவக்கரை, சரஸ்வதி விளாகம், கொன்னக்காட்டுப்படுகை, கீரங்குடி, மாதிரவேளூர், படுகை, பட்டியமேடு அகர எலத்தூர் வடரெங்கம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் முக்கிய சாலையாக இந்த ஆற்றங்கரை சாலை இருந்து வருகின்றது. இந்த சாலை மேம்படுத்தப்பட்டு 15 அண்டுகள் ஆகிறது. சாலை பல இடங்களில் குறுகியும் உடைந்தும் போயுள்ளது. சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சிதறிக்கிடக்கின்றன. ஜல்லிகள் கூர்மையாக கிடப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் இந்த சாலையில் செல்லுகின்ற போது அடிக்கடி தடுமாறி கிழே விழுந்து அடிபட்டு விபத்துக்குள்ளாகின்றனர். விவசாயிகளும் தொழிலாளர்களும் இன்த சாலையில் நடந்து செல்லவே மிகுந்த சிரமம் அடைகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் சைக்கிள்களில் செல்லும் போது சைக்கிள் டயர்கள் ஜல்லிகள் கிழித்து கிழிகின்றன. இதனால் உரிய நேரத்தில் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river ,Kollutai ,bank ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை