×

உதவமுன்வந்தவரும் வீட்டை இடித்ததால் போலீசில் பெண் புகார் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதுச்சேரி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது

காரைக்கால், பிப்.20: மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ், சுமார் ரூ.15.50 கோடி மதிப்பில், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிணறு, 5 ஆழ்குழாய் கிணறுகள், குடிநீர் பிரதான குழாய், குடிநீர் பங்கீட்டு குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை, காரைக்கால் கீழகாசாக்குடி எம்.எஸ்.பி.லட்சுமிநகரில்நேற்று நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அடிக்கல்நாட்டி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் பத்திரிகையாரிளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும், அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து வளர்ச்சித்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அம்ருத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ.15.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் பேர் பயனடைவர்.

காரைக்காலில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நேரு மார்க்கெட் வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகம் ஆகியவை வெகு விரைவில் திறக்கப்படும் என்றார். நிக ழ்ச்சியில், காரைக்கால் வட க்குத்தொகுதி எம்எல்ஏ திருமுருகன், மாவட்ட கலெக் டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.அமைச்சர் நமச்சிவாயம் பேட்டிநடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் புறக்கணித்தது, இந்த மாநில மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு பாதிப்பு வரும்போது மவுனமாக இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் பேசுவது என்பது புதுச்சேரியில், என்.ஆர் காங்கிரஸ், வாக்குவங்கிக்கான அரசியலை நடத்தி வருகிறது என்பதையே காட்டுகிறது. இது நிலைக்காது என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Tags : government ,Puducherry ,public ,demolition ,house ,
× RELATED புதுச்சேரி பாகூரில்...