நாட்டு நலப்பணி திட்ட முகாமில் இளைஞர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

பேரணாம்பட்டு, பிப்.20: பேரணாம்பட்டில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் இளைஞர்கள் 100 சதவீதம் வாக்களிகளிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்திமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் தனியார் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கவிழா நடைபெற்றது.2ம் நாளான நேற்று கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பார்த்தீனியம் செடிகள் மற்றும் பள்ளியின் அருகே உள்ள குப்பைகளை அகற்றினர். பின்னர், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடத்தினர்.தொடர்ந்து, நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாமில் பேரணாம்பட்டு தேர்தல் துணை தாசில்தார் வேல்முருகன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம் செய்தல் குறித்து விளக்கி கூறினார்.இந்த நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட வாக்காளர்களின் கடமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Related Stories: