வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 12ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம்

வேலூர், பிப்.19: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மார்ச் மாதம் 12ம் தேதி ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் 5வது மாடியில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் அரசு கூடுதல் செயலாளர் மற்றும் ஒய்வூதிய இயக்குனர் பங்கேற்கின்றனர்.

Advertising
Advertising

எனவே, அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள், ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள், மனுக்கள் அளிக்கலாம். மேலும் இதுதொடர்பான மனுக்களை இரட்டைப் பிரதிகளை வரும் பிப்ரவரி மாதம் 29ம் தேதிக்குள் கலெக்டருக்கு அஞ்சல் மூலமாகவும், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) அலுவலகத்திற்கு நேரடியாகவும் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: