சென்டாக் முறைகேடு வழக்கில் அதிகாரிகள் விடுவிப்புக்கு எதிராக மேல்முறையீடு

புதுச்சேரி, பிப். 19: புதுவை மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-2018ம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் கலந்தாய்வில் முறைகேடுகள் நடைபெற்றதென சிபிஐ வழக்கு தொடர்ந்தது. தற்போது இவ்வழக்கில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில் முகாந்திரமில்லை என சிபிஐ 6 அதிகாரிகளையும் விடுவித்துள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் அரசு அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் சென்டாக் மூலம் கிடைக்கப் பெற்ற இடத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.  

மேலும் இது சம்பந்தமாக சிபிஐயை அணுகி பாதிக்கப்பட்ட புதுவை மாநில மண்ணின் மைந்தர் மாணவர்களுக்காக மேல்முறையீடு செய்வதென முடி

வெடுத்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் விதிகளை மீறி மத்திய மருத்துவக் கவுன்சில், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி முறைகேடாக மாணவர்கள் சேர்க்கை பெற்ற கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென

குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: