×

ஒரே ஒருமுறை நியமன விதியை தளர்த்தி பைலேரியா இன்ஸ்பெக்டர் பதவியை நிரப்ப வேண்டும்

புதுச்சேரி, பிப். 19:  புதுச்சேரி சுகாதாரத்துறையில் யானைக்கால் ஆய்வாளர் பதவிகள் காலியாக உள்ளது. இதனை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே துறையில் பணியாற்றும் பூச்சி சேகரிப்பாளர்கள், இதற்கான பயிற்சியை முடித்து காத்திருந்தனர்.
ஆனால் நியமன விதிகளை காரணம் காட்டி  நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பூச்சி சேகரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 26 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வரும் தங்களுக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக களப்பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு கால கட்ட பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன் பூச்சி சேகரிப்பாளர்களாக பதவி  உயர்வு அளிக்கப்பட்டது. இதன்காரணமாக வேலைப்பளு கூடிவிட்டதாகவும், இதான் எந்த பண பலனும் இல்லையென தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2012ம் ஆண்டு கேரளமாநிலம் கோழிக்கோடுக்கு பைலேரியா இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும் பதவி உயர்வு  காலத்தோடு  அளிக்கப்படவில்லை. இதற்கிடையே வெளியில் இருந்து நேரடியாக நியமனம் மூலமாக அனைத்து பதவிகளும் நிரப்பப்பட இருப்பது வேதனையளிக்கிறது.

நியமன விதிகளின்படி 20 சதவீத பதவிகளை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆனால் தொடர்ந்து 8 ஆண்டுகள் பணிகள் முடித்தால்தான் பதவி உயர்வு அளிக்க முடியும். ஆனால் பூச்சி சேகரிப்பாளர்கள் ஓய்வு பெற  இரண்டு ஆண்டுதான் இருக்கிறது. இதனால் எங்களை பரிசீலிக்க துறை மறுப்பதாக கூறுகின்றனர்.அதே நேரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக யானைக்கால் ஆய்வாளர்கள் பதவி நிரப்பப்படவில்லை. அப்போதே காலத்தோடு நிரப்பியிருந்தால், எங்களுக்கு பதவி கிடைத்திருக்கும். இதற்கு எங்களை காரணமாக காட்டக்கூடாது. எனவே அரசு எங்கள் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து ஒரே முறை நியமன விதியை தளர்த்தி பைலேரியா இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்குமாறு அனைத்து பூச்சி சேகரிப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : billeria inspector ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...