தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விழுப்புரம், பிப். 19: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உலகத் தரத்துடன் கூடிய சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் நிறுவனத்துடன் (ஏசிசிஏ-லண்டன்) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினுடைய வட்டார முதன்மை நிர்வாக அதிகாரி (தெற்கு) சரவணக்குமார் மற்றும் சர்வதேச திறன் மேம்பாட்டு கழகத்தினுடைய (ஐஎஸ்டிசி) வட்டார முதன்மை நிர்வாக அதிகாரி கெல்வின் ப்ரடி பவுல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவர்கள் உரையில், தமிழகத்தில் 6 கல்லூரிகளில் மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள இந்நிறுவனம் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக இக்கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றனர்.

வரும் கல்வியாண்டு முதல் வணிகவியல் துறையில் துவக்கப்படவுள்ள சர்வதேச கணக்கியல் மற்றும் நிதி பாடப்பிரிவு, ஏசிசிஏ-ன் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக உதவும் என்றும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வின் இறுதியாக இஎஸ்எஸ்கே கல்வி குழுமத்தின் செயலர் செந்தில்குமார் மற்றும் பதிவாளர் முனைவர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினுடைய வட்டார முதன்மை நிர்வாக அதிகாரி (தெற்கு) சரவணக்குமார் மற்றும் சர்வதேச திறன் மேம்பாட்டு கழகத்தினுடைய (ஐஎஸ்டிசி) வட்டார முதன்மை நிர்வாக அதிகாரி கெல்வின் ப்ரடி பவுல் ஆகியோரும் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் (தன்னாட்சி) முனைவர் அருணாகுமாரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Related Stories: