×

அண்ணாமலை பல்கலைக்கழக செவிலியர் கல்லூரியில்

தீப ஒளியேற்றும் நிகழ்ச்சிசிதம்பரம், பிப். 19: பிளாரன்ஸ்  நைட்டிங்கேலின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு இந்த  வருடம் 2020ஐ சர்வதேச செவிலியர் மற்றும் மகப்பேறு நல செவிலியர் ஆண்டாக  அறிவித்துள்ளது. இதையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செவிலியர்  கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் தீபஒளி ஏற்றி செவிலியர்கள்  உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை  முதல்வர் காந்திமதி வரவேற்றார். முதல்வர்  கேரலின்கருணாகரி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200 வது பிறந்தநாள் ஆண்டு விழா  மற்றும், சர்வதேச செவிலியர் மற்றும் மகப்பேறு நல செவிலியர்  ஆண்டைப்பற்றியும் தீபஒளியேற்று விழாவின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  முருகேசன் சிறப்பு விருந்தினராக  பங்கேற்று பேசினார். அப்போது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயர்  விளக்கத்தையும், செய்யும் தொழிலே தெய்வம் என்றும், சமுதாயத்திற்கு செய்யும்  சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்றும் குறிப்பிட்டார். நான் செவிலியர்களை  ஆதரிக்கிறேன் என்ற விளக்கப்பட வாசக அட்டையை அனைவரும்  ஏந்தி உறுதிமொழி  எடுத்தனர். இணை பேராசிரியர சாரா மாணவ, மாணவிகளுக்கு உறுதிமொழி பிரமாணம்  செய்து வைத்தார்.

பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) டாக்டர்  கிருஷ்ணமோகன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர்  டாக்டர் ராஜ்குமார், பல் மருத்துவ புல முதல்வர் டாக்டர் ராஜசிகாமணி ,  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகம் ஆகியோர்  வாழ்த்தி பேசினார்கள். பேராசிரியர் கமலா, கலாவதி, இணைபேராசிரியர்  ஜெயலட்சுமி மற்றும் செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள்,  மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Annamalai University Nurses College ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை