×

மாற்று இடம் வழங்க கோரி கடலூர் கலெக்டரிடம் மனு

கடலூர்,  பிப். 19: சிதம்பரம்  ஓமக்குளம் பகுதி மக்கள் சி.தண்டேஸ்வரநல்லூர்  ஊராட்சி மன்ற தலைவர்  மாரியப்பன் தலைமையில் கடலூரில் நடந்த மக்கள்  குறைகேட்பு கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் வழங்கிய  மனுவில் கூறியிருப்பதாவது: ஓமக்குளம்  மேல்கரை பகுதியில்  வசித்து வந்த 90 சதவீத ஆதிதிராவிட இனத்தை சார்ந்த  மக்களாகிய நாங்கள் 60  ஆண்டுகாலமாக மூன்று தலைமுறையாக குடியிருந்து வந்த  வீட்டை இடித்து தள்ளிவிட்டனர். எனவே அரசு ஆணையின்படி டோக்கன் என்ற பெயரில்  மாற்று இடம்  வழங்குவதாக கூறினார்கள். கடந்த டிசம்பர் 2ம்தேதி மாவட்ட  ஆட்சியர்  அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த  ஆறு மாதங்களில்  எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக எடுக்கப்படவில்லை. பல  சூழ்நிலையில் அன்றாட  உணவுக்கு தேவையானவற்றை சரிசெய்து கொள்ள முடியாத  தாழ்த்தப்பட்ட மக்களாகிய  எங்களுக்கு பல சிரமத்தின் மத்தியில் வாடகை தர  முடியாத சூழ்நிலையால் பொது  இடங்களில் குடி இருந்து வருவதால் பல  பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்,  மாவட்ட கவுன்சிலர் மற்றும் மக்கள்  பிரதிநிதிகளிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டு உள்ளது. எனவே எங்கள் வாழ்வாதாரமான  இருப்பிடத்திற்கு வழிவகை  செய்து உதவிட வேண்டிக்கொள்கிறோம்.

Tags : Cuddalore Collector ,location ,
× RELATED ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்