×

கல்லூரி ஆண்டு விழா

தேனி, பிப். 19: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காளிராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். இதில் கல்லூரி மலரினையும், தமிழ்துறையின் காலச்சுடர் இதழினையும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன் வெளியிட, தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன்தேஜஸ்வி பெற்றுக்கொண்டார்.இதில் கல்லூரியின் பெண்கள் விடுதிச் செயலாளர் சேகர் மற்றும் நாடார் உறவின்முறை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள், துணை முதல்வகள், விடுதிக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இணைச் செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

Tags : College Anniversary ,
× RELATED நாங்குநேரி கல்லூரி ஆண்டுவிழா