×

தேனியில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு வக்கீல் சங்கம் அறிவிப்பு

தேனி, பிப். 19: சென்னையில் உயர்நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசாஃர் தாக்கியதை கருப்பு நாளாக அனுசரிக்கும் வகையில், தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களை இன்று ஒரு நாள் வக்கீல்கள் புறக்கணிப்பு செய்வது என வக்கீல்கள் சங்கம் முடிவு
செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் முடிவின்படி, நேற்று தேனி வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வக்குமார் வரவேற்றார். இதில் துணை தலைவர்கள் செந்தில்குமார், பாஸ்கரன், துணை செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, ‘சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் கடந்த 2009ம் ஆண்டு பிப்.19ம் தேதியன்று, போலீசார் புகுந்து நீதிபதிகள் மற்றும் போலீசாரை தாக்கிய நாளை கருப்புநாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாளை (இன்று) நீதிமன்றத்திற்கான கருப்பு நாளாக கருதி, இன்று ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Tags : lawyer ,
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது