×

போலி ஆவணங்கள் மூலம் லைசென்ஸ் * மதுரையில் 4 பேர் கைது

மதுரை, பிப். 19: மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதன்பேரில், 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், மதுரை நகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் ஜஸ்டின் பிரபாகர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இதில், லைசென்ஸ் மற்றும் பாட்ஜ் பெற அரசு நிர்ணயித்த கல்வித்தகுதியை விட குறைந்த கல்வித் தகுதி உள்ள நபர்களுக்கும் போலி ஆவணங்கள் மூலம் லைசென்ஸ், பாட்ஜ் வழங்கியது தெரிந்தது.

இதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் லைசென்ஸ் தயாரிக்கும் பணியில் உள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் சவுந்திர சுப்பையா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. மதுரையைச் சேர்ந்த தனியார் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் பாண்டியராஜன், முத்துராமன், புரோக்கராக இருந்து வந்த அப்பாஸ் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து லைசென்ஸ் பெற ஆட்களை அழைத்துவந்து மோசடிக்கு உடந்தையாக இருந்ததம் தெரிந்தது. இதைத்தொடர்ந்து இந்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...