1.91 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விநியோகம்

மதுரை, பிப். 19: மதுரை மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 1.91 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு பட்ஜெட்டில், வரும் கல்வியாண்டிற்கு (2020-21) பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் (2019-2020) இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 21 லட்சத்து 86 ஆயிரத்து 216 மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போன்று, பிளஸ்1 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 120 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இலவச சைக்கிள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், கிரையான்ஸ், கணித உபகரணப்பெட்டி போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இடைநிற்றலை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை 10 பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு ஒக்கப்பட்டு, அது பிளஸ்2 முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், இலவச சத்துணவுத்திட்டத்தின் கீழ் 6,53,775 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: