ஏ.இ.டி மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்கம்

ஆத்தூர், பிப்.19: ஆத்தூர் ஏ.இ.டி மகளிர் கல்லூரியில், தமிழ்துறை சார்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் நடந்தது.ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஏ.இ.டி மகளிர் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பில், தேசிய அளவிலான பயிலரங்கம் நடந்தது. கல்லூரி செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செண்பகம் வரவேற்றார். நிறுவனர் செங்கோடன் முன்னிலை வகித்தார். தேசிய பயிலரங்கத்தில் பெரியார் பல்கலைகழக தமிழ்துறை போராசிரியர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு, தமிழர்களின் பண்பாட்டு பழமையும், புதுமையும் என்னும் தலைப்பில் ேபசினார். இந்த பயிலங்கரங்கில் பல்வேறு கல்லூரிகளின் உதவி பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர். தேசிய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் சங்கர், பொருளாளர் சிவநேசன், இயக்குனர் பழனியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்துறை தலைவர் சற்குணம் நன்றி கூறினார்.

Related Stories: