×

மேட்டூர் வனப்பகுதியில் இரண்டு மயில்கள் மர்ம மரணம்

மேட்டூர், பிப்.19: மேட்டூர் வனத்துறைக்கு சொந்தமான சீத்தா மலைத்தொடர் காவிரி கரையை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதி அடர்த்தியாகவும், பசுமையானதாகவும் இருப்பதால் பறவைகள் அதிக அளவில் உள்ளன. இதில் மயில்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை வனப்பகுதியில்  இரண்டு மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள், மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் கடும் வெப்பகாலங்களில், நோய்தொற்று ஏற்பட்டு வெள்ளை கழிசல் நோய் தாக்குதலுக்குள்ளாகி மயில்கள் இறந்தது கண்டு பிடிகப்பட்டது. மேலும், மயில்கள் பாதிக்காமல் இருக்க, வனத்துறை சார்பில் நடடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்திய பறவை இனங்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மேட்டூர் பகுதியில் நோய் பாதிப்பால் மயில்கள் உயிரிழந்துள்ளது பறவைகள் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : death ,forest ,Mettur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...