×

டேக்வாண்டோவில் தங்கம் கல்லூரி மாணவருக்கு அமைச்சர் பாராட்டு

தர்மபுரி, பிப்.19: பெரியார் பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில், தங்கம் வென்ற மாணவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பாராட்டினார்.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி நடந்தது. இந்த போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில்,  தர்மபுரியை சேர்ந்த மாணவர் புருஷோத்தமன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று  சாதனை  படைத்துள்ளார். இதன் மூலம் பஞ்சாப்  மாநிலத்தில் மார்ச் முதல் வாரத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக  அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு மாணவர் புருஷோத்தமன் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவர் புருஷோத்தமன், உயர்கல்வித்துறை அமைச்சர்  அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, டேக்வாண்டோ பயிற்சியாளர் சுதாகர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,College student ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...