×

பென்னாகரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி

தர்மபுரி, பிப்.19: நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி பென்னாகரம் அருகே பெரும்பாலையில் நடந்தது. நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி பென்னாகரம் அருகே பெரும்பாலையில் நடந்தது. இதில் பென்னாகரம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து, நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடியின் அவசியம், சாகுபடிக்கு பின் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு குறித்து விரிவாக பேசினார்.  பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை பேராசிரியர் அய்யாதுரை, விதை நேர்த்தி செய்தல், வரப்பில் பயிரிடுதல், பூச்சி கவர்ச்சி பொறிகள் பயன்படுத்துதல், பந்தல் அமைத்தல் மற்றும் முக்கிய உழவியல் தொழில்நுட்பங்கள், கோடை உழவு செய்தல் பற்றி பேசினார்.பென்னாகரம் வேளாண்மை அலுவலர் மணிவண்ணன், பசுந்தாள் உரம் மற்றும் நெல் அறுவடைக்கு பின் உளுந்து பயிரிடுதல் குறித்து விளக்கினார். பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து சின்னம்பள்ளியில், திருந்திய நெல் சாகுபடி முறையில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயலில், அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வது குறித்த தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.


Tags : Pennagaram ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...