தில்லைநகர் மக்கள் மன்றத்தில் சேலைகள் கண்காட்சி

திருச்சி, பிப்.19: ஆர்.கே.கார்மெண்ட்ஸ் சார்பில் சேலைகள் கண்காட்சி திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடந்து வருகிறது.இக்கண்காட்சியில் ரூ.550 முதல் ரூ.1,500 மதிப்பிலான பேன்சி டிசைனர் சேலைகள், ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெங்களூரு டிசைனர், மைசூர் டிசைனர், மணிப்பூர் கோட்ட செக், பனராசி பார்ட்டிவேர் டிசைனர், பேன்சி பார்ட்டி வேர் டிசைனர், டானி சிப்பான் டிசைனர், பந்தனி பிரிண்ட் டிசைனர், பெல்காம் டிசைனர் உள்பட பல்வேறு வகையான சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.பெண்கள் ஏராளமானவர்கள் வந்து தங்களுக்கு விருப்பமான சேலைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் பெண்களுக்கு உள்ளாடைகள், நெயில் பாலிஸ் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கண்காட்சி நாளை (20ம் தேதி) வரை நடைபெறும் என்று ஆர்.கே.கார்மெண்ட்ஸ் உரிமையாளர் சிவராஜ் கூறினார்.

Related Stories: