நீண்ட நாட்கள் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருச்சி, பிப்.19: திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருச்சி மன்னார்புரம் மின்வாரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியூ மின் ஊழியர்கள் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்ட துணைச்செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 மற்றும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். நீண்ட நாட்களாக மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும். கே.2, சிட் அக்ரிமெண்ட் மூலம் வாரியமே நேரிடையாக ஒப்பந்த பணிகளை செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும். 22.12.2016ல் மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வாரியம் அளித்த வாக்குறுதி மற்றும் கஜா புயல் மின் சீரமைப்பு பணியின்போது மின்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: