×

திருத்துறைப்பூண்டியில் உழவர் நலத்திட்ட பயனாளிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம்

திருத்துறைப்பூண்டி, பிப்.19: திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பாரதப்பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை பெறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுநாள் வரை வங்கியில் கணக்கு எதுவும் துவங்காத விவசாயிகள் கூட இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக வங்கி கணக்குகள் துவங்கி வருகின்றனர். மேலும் உழவர்களின் வங்கி பயன்பாட்டினை அதிகப்படுத்திடவும், 100 சதவிகிதம் அனைத்து விவசாயிகளும் வங்கி கடன் அட்டை பெற்று அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டும் கிசான் கிரிடிட் கார்டு எனும் தேசிய உழவர் கடன் அட்டையினை அனைத்து விவசாயிகளும் பெறுவதற்கு தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் மூலம் முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இத்திட்டத்தின் பயனாளிகள் 4807 பேரில் 3555 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்து அதன் முலம் உழவர் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கும் உழவர் கடன் அட்டை 100 சதவிகிதம் வழங்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் அடிப்படையில் உழவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இத்திட்டத்தில் இணைத்து கடன் அட்டை பெற வைப்பதற்காக திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முனைப்பு இயக்கங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள்.விவசாயிகளும் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் நகல் முதலியவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்பணியினை வேளாண்மைத்துறையின் களப்பணியாளர்களான வேளாண்மை உதவி அலுவலர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அனைத்து விவசாயிகளும் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Credit card issuance camp ,Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...