×

அரசு பள்ளியில் பிளாஸ்டிக் தீமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, பிப்.19: திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி சமூகப்பணி துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தங்கராசு தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் திருவெங்கடேசன் முன்னிலை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி சமூகப்பணி துறை உதவி பேராசிரியர் ப்ரீத்தி வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக ராஜம் ஆர்க்கானிக் வேர்ல்ட் உரிமையாளர் ரவிக்குமார் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விளக்கினார்.நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியை ராஜகுமாரி, பள்ளி ஆசிரியைகள் சித்ரா, சபிதா, வித்யா, யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவன் வெங்கடேசன் நிகழ்ச்சி குறித்து கருத்துரை வழங்கினார். மாணவிகள் யமுனா, ஜெயந்தி, சிவசங்கரி ,ரேவதி, சுகன்யா ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.


Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்