×

அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்ககோரி டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப். 19: அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்ககோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தஞ்சை ரயிலடியில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சிஐடியூ அகில இந்திய துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு துவக்கி வைத்து பேசினார்.சிஐடியூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வீரையன், மாவட்ட பொருளாளர் மதியழகன், மாநிலக்குழு ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் ஆய்வு என்ற பெயரில் ஒரு சில கடைகளில் மட்டும் தொடர்ந்து சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் கட்டாய மாமூல் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். ஊழியர்களை தரக்குறைவாக பேசிய கடைகளுக்கு ஆய்வுக்கு வந்த கரூர் மாவட்ட உதவி மேலாளர், அவருடன் தரகர்களாக வந்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

விற்பனை தொகைக்கு ஏற்ப கடைகளில் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். கடை செலவுகளை நிர்வாகமே ஏற்க வேண்டும். ஊழியர்களை மிரட்டும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக பார்களை நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு சென்ற கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உதிரியாக இருக்கும் ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் அன்பு, முருகேசன், மில்லர் பிரபு, தரைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா, டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, ரவிச்சந்திரன், சரவணன், நெடுஞ்செழியன், பன்னீர்செல்வம், இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : TASMK Employees ,state employees ,
× RELATED காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி...