×

விவசாயிகளுக்கு ஆலோசனை இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க எளிமையாக நடந்த குடந்தை நந்தவனத்து மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

கும்பகோணம், பிப். 19: கும்பகோணத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசாரின் உத்தரவின்படி நந்தவனத்து மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா நடந்தது.கும்பகோணம் பேட்டை வடக்கு தெருவில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா, தை மாதத்தில் பால்குட உற்சவம் நடப்பது வழக்கம். 7 ஆண்டுக்கு முன் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2 விழாக்களும் நடத்துவது நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இக்கோயிலில் பால்குட உற்சவம் நடத்த ஒருதரப்பினருக்கு கோர்ட் அனுமதி தந்ததாக தெரிகிறது. இதற்காக கோயிலில் விழா நடத்த தேவையான ஏற்பாடுகளை தெருவாசிகள் செய்து வந்தனர்.

அப்போது மற்றொரு தரப்பினருமும் கோயிலில் பால்குட உற்சவம் நடத்த வேண்டும். அதேபோன்று விமர்சியான ஏற்பாடுகளை அதே நாளில் கோயிலில் செய்வோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து இருதரப்பினரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி திருவிழா ஏற்பாடுகளை விமரிசையான முறையில் செய்யக்கூடாது. ஒலி, ஒளி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களை அகற்ற வேண்டும். மேள ளம் இல்லாமல் பால்குட விழா நடத்த வேண்டும். இருதரப்பினரும் அமைதியான முறையில் ஆன்மிக நெறிமுறைப்படி நடத்த வேண்டும் என்றனர். இதனால் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரத்தை தெருவாசிகள் அகற்றினர்.இதையடுத்து பால்குட உற்சவத்தை நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஒரு தரப்பினரும், 10 மணிக்கு மேல் மற்றொரு தரப்பினரும் நடத்றதினர். கும்பகோணத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக சென்ற பால்குட உற்சவத்தின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...