×

ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு வாரவிழா

ஒரத்தநாடு, பிப். 19: ஒரத்தநாடு அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு வாரவிழா மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் விழா மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் வெற்றிவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட காசநோய் துணை இயக்குனர் முகமது கலீல் சிறப்புரையாற்றினார்.காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பென்ச் மார்க் மெடிக்கல் டிரஸ்டியை சேர்ந்த மருத்துவர் சுனில்குமார் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து, ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒரத்தநாடு அரசு மருத்துவர் நவீன், அனுஜா, தேவிபாலா, காசநோய் மேற்பார்வையாளர்கள் ராஜேஷ், விஜயகுமார், ஆனந்தி, சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : Tuberculosis Eradication Week ,Orathanadu Government Hospital ,
× RELATED ஒரத்தநாடு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் திறப்பு