×

தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 390 மனுக்கள் குவிந்தன

தஞ்சை, பிப். 19: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவிடம் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கை அடங்கிய 390 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார்.இதைதொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மூலம் நரிக்குறவர் நலவாரிய உறுப்பினருக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஜானகி என்பவருக்கு ரூ.17 ஆயிரம் உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 2019-2020க்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலரிடம் ரூ.66,500க்கான காசோலை, திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலரிடம் ரூ.7 ஆயிரத்துக்கான காசோலை, தஞ்சை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரிடம் ரூ.7 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.மேலும் படைவீரர் கொடி நாளில் அதிக வசூல் செய்த தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அருள்ஜோதி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...