குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டன பொதுக்கூட்டம்

பேராவூரணி, பிப். 19: பேராவூரணியில் மத்திய அரசின் மக்கள்விரோத சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து கட்சியினர், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஜமாஅத் செயலாளர் ஏசியன் சம்சுதீன் வரவேற்றார். ஜமாஅத் தலைவர் அப்துல் முத்தலிபு முன்னிலை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன், தமிழக மக்கள் புரட்சி கழக தலைவர் அரங்ககுணசேகரன், நாம் தமிழர் தலைமை பேச்சாளர் திலீபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மோட்ச குணவழகன், திக மாவட்ட செயலாளர் சிதம்பரம், மெய்ச்சுடர் வெங்கடேசன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் பேசினர்.

முன்னதாக 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை ஏந்திய இளைஞர்கள் பயணியர் மாளிகையில் இருந்து பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தனர். கூட்டத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தமிழக அரசு இந்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 1,000 பெண்கள் உட்பட 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆணைக்காரன்பாளையத்துக்கு வரும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் எங்கள் பகுதியை அலட்சியப்படுத்தினர்.

Related Stories: