ஆணைக்காரன்பாளையம் மக்கள் முடிவு கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை, பிப். 19: பட்டுக்கோட்டையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து நாதஸ்வரம், மேளம், கரகாட்டம், தப்பாட்டம் என கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கிய பேரணியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நாடிமுத்துநகர்,பழனியப்பன்தெரு, மணிக்கூண்டு, பெரியதெரு, தலைமை தபால் நிலைய சாலை வழியாக காசாங்குளம் அண்ணா அரங்கம் அருகில் பேரணி நிறைவடைந்தது.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், கோட்ட கலால் ஆணையர் ரவிச்சந்திரன், கலால் தாசில்தார் மைதிலி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் உஷா, தலைமை காவலர் பழனிவேல் மற்றும் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏனாதி ராஜப்பா மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வழங்கினர்.

Related Stories: