×

கலெக்டர் எச்சரிக்கை விராலிமலை அருகே மாங்குடியில் அட்மாதிட்டத்தில் பண்ணை பள்ளி பயிற்சி

விராலிமலை, பிப்.19: விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விராலிமலை அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் வேளாண் சூழ்நிலைக்கேற்ப காய்கறி சாகுபடி முறைகள் பற்றிய பண்ணைப்பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பண்ணைப்பள்ளி விராலிமலை வேளாண்மைஉதவி இயக்குநர் ராமு தலைமையில் பயிற்சி நடைபெற்றது. வட்டாரதொழில்நுட்பமேலாளா் ஆனந்தஜோதி வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும்,காய்கறிசாகுபடிமுறைகள் நுண்ணீர்பாசனதிட்டம் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சிவபாலன், குழித்தட்டுநாற்றங்கால் முறையில் நாற்றங்கால் தயாரித்தல் மற்றும் வேளாண் சூழ்நிலைக்கேற்ப காய்கறி சாகுபடிமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும் முன் மாதிரி செயல்விளக்கத் திடலை பார்வையிட்டு அதில் தாக்கப்பட்ட பூச்சிமற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது .தோட்டக்கலைஉதவிஅலுவலர், தெய்வநாதன் காய்கறிசாகுபடிமுறைகள் பற்றியும்,தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்பகையேடு ,குறிப்பேடுமற்றும் காய்கறிவிதைகள் போன்றவை வழங்கப்பட்டன.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவிதொழில்நுட்பமேலாளா–்கள் ஆரோக்கியராஜ் மற்றும் சக்திவேல்ஆகியோர் செய்திருந்தனா்.

Tags : Farm Alert Training School ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா