×

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, பிப்.19: புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த பூச்சொரிதல் விழா குறித்து உபயதாரர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை கோயில்கள் நிர்வாக அதிகாரி பாரதிராஜா தலைமை தாங்கினார்.அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் பழனிவேலு, அறங்காவலர்கள் பேரவை கணேசன் மற்றும் 16 மண்டகப்படி உபயதாரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோவில் விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் வசதி, விழாக்கால பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



Tags : Trivandrum Muttumariamman Temple Closing Ceremony Advisory Meeting ,
× RELATED போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார்...