×

பாஜ பிரமுகர் கடை மீது முட்டை வீச்சு

அறந்தாங்கி, பிப்.19: அறந்தாங்கி அருகே பாஜ பிரமுகரின் கடைமீது நள்ளிரவில் முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் மேலப்பாலம் அருகே வல்லம்பகாட்டைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பாண்டியன்(37) என்பவர் பால்கடை நடத்தி வருகிறார். பாண்டியன் அறந்தாங்கி ஒன்றிய பாஜக இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம்போல தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 2 மணிக்கு கடைக்கு பால் இறக்குவதற்காக வந்தபோது, அவரது கடையின் ஷட்டரில் சிலர் முட்டைகளை வீசி அசிங்கப்படுத்தி இருந்தனர்.மேலும் விளம்பர பதாகைகளையும் சேதப்படுத்தி இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கடைமீது முட்டை வீசி அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகுடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார், கடைமீது முட்டைகளை வீசியது யார்? எதற்காக முட்டை வீசினர் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். அறந்தாங்கி அருகே பாஜ பிரமுகர் கடைமீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

Tags : Baja ,celebrity shop ,
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...