×

வாடகை நிலுவையில் உள்ள நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு

மயிலாடுதுறை,பிப்.19: மயிலாடுதுறை நகராட்சியில் கடைகளுக்கு வாடகை செலுத்தாதால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள நகராட்சி கடைகளுக்கான வாடகையை பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு அதிகாரிகள் கடையை பூட்டு போட்டு பூட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். கூறைநாட்டில் உள்ள பழனிச்சாமி அங்காடியில் உள்ள மூன்று கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதில் உள்ள ஒரு கடைகாரர் நேற்று முன்தினம் ரூ.60 ஆயிரம் கட்டியுள்ளார். ரூ.50 ஆயிரத்தை நேற்று கட்டுவதாக தெரிவித்தார். ஆனால் ரூ.1.35 லட்சத்தையும் கட்டினால்தான் என்று கூறி ஆணையர் மற்றும் அதிகாரிகள் தடாலடியாக கடையை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர். அந்தக்கடைகாரர் மாதா, மாதம் கட்டும் வாடகையில் பாக்கி வைக்கவில்லை, கடந்த ஆண்டு 10வது மாதம் ஓர் அறிவிப்பை விட்டது.

ஏற்கனவே கட்டிவரும் வாடகையைவிட மூன்று மடங்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வாடகையை ஏற்கனவே 30 மாதத்திற்கு முன்பிருந்து கட்டவேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியிருந்தனர். ஆனால் முன்தேதியிட்டு உயர்த்திய வாடகைத்தொகையை உடனடியாகக் கட்டவேண்டும் என்று வற்புறுத்தவே நேற்றுமுன்தினம் ரூ.60 ஆயிரம் கட்டியுள்ளார், நேற்று ரூ.50 ஆயிரம் கட்ட முற்பட்டார், மொத்தமாகக் கட்டுகிறாயா இல்லையா என்றதற்கு ஒருவாரம் அவகாசம் கேட்டுள்ளார், அதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறி டீக்கடையில் பால், வடை, பொட்டலங்கள் உள்ளதோடு ஷட்டரை இறக்கி சீல் வைத்துவிட்டு சென்றனர்.ஆனால் பல்வேறு கடைகளுக்கு லட்சக்கணக்கில் பாக்கியிருந்தும் அவற்றை பூட்டாமல் சென்றுள்ளனர், நகராட்சி அதிகாரிகளின் அத்துமீறல் இந்த ஆண்டு தலைவிரித்தாடுகிறது, நகர்மன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அவர்களை கேள்விக்கேட்க ஆள் இல்லை. எந்தந்த வழியில் வசூல் வேட்டை நடத்த முடியுமோ அந்தந்த வழியில் வசூல் வேட்டை நடைபெற்றுவருகிறது.நகராட்சி அதிகாரிகளின் காட்டில் மழை கொட்டோகொட்டென்று கொட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.


Tags : shops ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ