×

நாகையில் 2வது நாளாக ராணுவத்திற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம்

நாகை,பிப்.19: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரண்டாம் நாளாக ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. இதற்கான இரவுநேரத்தில் இளைஞர்கள் சாலையோரம் படுத்து தூங்கினர்.நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று முன்தினம் (17ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. இந்த முகாம் வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய தமிழகத்தை சேர்ந்த 14 மாவட்ட இளைஞர்களும், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் கலந்து கொள்ள உள்ளார்கள். ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக கடந்த 16ம் தேதி இரவே முகாம் நடைபெறும் இடத்திற்கு ஏராளமான இளைஞர்கள் குவிய தொடங்கினர். நேற்று முன்தினம் (17ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு கர்னல் ரத்தோர் தலைமையில் ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது.
முகாமில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த இளைஞர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து எடுத்து வந்தனர். மேலும் விண்ணப்ப படிவத்தில் கேட்டது போல் உறுதிமொழி பத்திரம், பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்கள், இருப்பிடச்சான்று, திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை எடுத்து வந்தனர். முன்னாள் படைவீரரை சார்ந்தவர்கள் என்றால் ரிலேசன்ஷிப் சான்றுகளை எடுத்து வந்தனர். முகாம் வரும் இளைஞர்கள் முன்னதாகவே நாகை வருகை தந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகம், அரசு ஐடி ஐ வளாகம் ஆகிய இடங்களில் தங்கினர். இரவு நேரங்களில் அங்கேயே படுத்து தூங்கினர்.

ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அங்கிருந்து அவர்கள் கை ரேகை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உயரம் சரிபார்க்கப்பட்டது. இதன்பின்னர் ஓடுதல், தாண்டுதல் உள்ளிட்டவை உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டு உயரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவ இளைஞர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் திருச்சி, சிவகங்கை, அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த சோல்சர் ஜெனரல் டியூட்டி பணிக்கு முகாம் நடந்தது. நேற்று(18ம் தேதி) கன்னியாகுமரி, புதுகை, காரைக்கால் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முகாம் நடந்தது. இன்று(19ம் தேதி) திருநெல்வேலி, கரூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், நாளை ( 20ம் தேதி) பெரம்பலூர், திருவாரூர், விருதுநகர், நாகை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், 21ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் சோல்சர் ஜெனரல் ஜெனரல் டியூட்டி பணிக்கு முகாம் நடக்கிறது.

வரும் 22ம் தேதி 15 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு சோல்சர் டெக்னிக்கல் பணிக்கு முகாம் நடக்கிறது. வரும் 23ம் தேதி அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகை, பெரம்லூர், புதுகை, ராமநாதபுரம், தஞ்சை, து£த்துக்குடி, திருச்சி ஆகிய 10 மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், 24ம் தேதி திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர், காரைக்கால், சிவகங்கை ஆகிய ஆகிய 5 மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சோல்சர் டிரேஸ்மேன் பணிக்கு முகாம் நடக்கிறது.இதை தொடர்ந்து 2 நாட்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு வரும் 26ம் தேதி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. சோல்சர் டெக்னிக்கல் பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியும், சோல்சர் டிரேஸ்மேன், சோல்சர் ஜெனரல் டியூட்டி ஆகிய பதவிக்கு எட்டாம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் இயக்குனர் அறிவுரை

Tags : Army ,recruiting camp ,Naga ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...