×

284 நிலையங்கள் மூலம் 1லட்சத்து 18 ஆயிரம் டன் நெல் கொள்முதல்

நாகை,பிப்.19: நாகை மாவட்டத்தில் 284 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 1 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய தாலுகாக்களில் 137 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாக்களில் 147 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 284 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 15ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 67 ஆயிரத்து 683 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு மையங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 567 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 223.52 கோடி. அதில் இதுவரை ரூ.179 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 44.52 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரித்தார்.அதிகாரி தகவல்



Tags : stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...