×

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 19: டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளைக் கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், முறைகேட்டை தடுத்து நிறுத்தவும், எல்ஐசி, பிஎஸ்என்எல், ஏர்இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது.அரசு அறிவித்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமனம் செய்யும் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடர், குளித்தலையில் வாழைப்பழ ஜாம் தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரிநீரைக் கொண்டு வர வேண்டும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக நலிவடைந்துள்ள கரூர் டெக்ஸ்டைல்ஸ் தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது,மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். ராஜா, ராஜிவ்காந்தி, நாகராஜன், ரஞ்சிதா முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு பாலாஜி கண்டனம் தெரிவித்து பேசினார்.

Tags : Indian ,protests ,Democrat Youth Association ,DNPSC ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...