×

குருவிகுளம் வட்டாரத்தில் பயிர் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

தென்காசி, பிப்.19: தென்காசி மாவட்டம், குருவிகுளம் வட்டாரத்தில்  பயிர் காப்பீடு  திட்ட சிறப்பு முகாம் இன்று துவங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2016 -17, 2017 -18ம் ஆண்டுகளில் ஐசிஐசிஐ லம்பர்டு பொது காப்பீட்டு நிறுவனத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் கணக்கீட்டின்படி இழப்பீடு பெற தகுதி இருந்தும் வங்கி கணக்கு எண், ஆவணங்கள் சரியாக கொடுக்காத விவசாயிகளிடமிருந்து ஆவணங்கள் சரி பார்த்து பெற்றிடவும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் எண் வங்கி கணக்கு எண் போன்ற விபரங்கள் சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ளவும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன் விபரங்கள் வருமாறு, இன்று (19ம் தேதி) வடக்கு குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, சுந்தரேசபுரம், கே. ஆலங்குளம், செட்டிகுளம் ஆகிய ஊர்களுக்கு குருவிகுளம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்தும்,  20ம் தேதி செவல்குளம், மலையான்குளம், உசிலங்குளம், நாலு வாசன் கோட்டை, தெற்கு குருவிகுளம் ஆகிய ஊர்களுக்கு குருவிகுளத்தில் வைத்தும்,21ம் தேதி ஏ.கரிசல்குளம், பெருங்கோட்டூர், சத்திரம் கொண்டான், அழகாபுரி, மதுராபுரி, ஏ.மதுராபுரி, வெள்ளகுளம் ஆகிய கிராமங்களுக்கு ஏ. கரிசல் குளத்தில் வைத்தும், 24 ம் தேதி பழங்கோட்டை கே. கரிசல்குளம், களப்பாளங்குளம், நாளந்துலா, சாயாமலை, மருதங்கிணறு, மகேந்திரவாடி ஆகிய கிராமங்களுக்கு கொக்கு குளத்தில் வைத்தும், 25ம் தேதி திருவேங்கடம், சங்குபட்டி, வரகனூர், குளக்கட்டாக்குறிச்சி, குறிஞ்சாக்குளம் மை பாறை ஆகிய கிராமங்களுக்கும மை பாறையில் வைத்தும்,  27ம் தேதி கலிங்கப்பட்டி கரிசாத்தான் குலசேகரபேரி, சத்திரப்பட்டி, ரங்கசமுத்திரம், சுப்பையாபுரம் ஆகிய கிராமங்களுக்கு கலிங்கப்பட்டியில் வைத்தும் நடைபெற உள்ளது. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு குருவிகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Crop Insurance Scheme Special Camp ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது