ஆறுமுகநேரியில் புறா பந்தய பரிசளிப்பு விழா

ஆறுமுகநேரி, பிப். 19: சென்னையில் இருந்து ஆறுமுகநேரி வரை நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் வெற்றிபெற்ற புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 13மணி 51நிமிடம் 39 விநாடிகளில் வந்த புறா முதலிடத்தை வென்றது.

 ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் புறா பந்தய கிளப் சார்பில் சென்னையில் இருந்து ஆறுமுகநேரிக்கு புறா பந்தயம் நடந்தது.  சுமார் 610 கி.மீ. வான்வெளி தூரம் நடந்த இப்போட்டியில் 21 புறாக்கள் கலந்துகொண்டன.  சென்னை காஞ்சிபுரம் சாலையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் காயல்பட்டினம் ரத்தினபுரியை சேர்ந்த சின்னத்துரை என்பவரது புறா 13 மணி 51 நிமிடம் 39 வினாடிகளில் ஆறுமுகநேரி வந்தடைந்தது.  இதன் மூலம் அவரது புறா முதலிடத்தை வென்றது. இதில் காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெரு அப்துல் காதர் என்பவரின் புறாக்கள் 14 மணி 31நிமிடம் 38 விநாடிகளில் வந்து 2வது இடத்தையும், அவரது மற்றொரு புறா 15 மணி 25 நிமிடம் 25 விநாடிகளில் வந்து 3வது இடத்தையும் வென்றன. ஏற்பாடுகளை ஸ்டார் ரேசிங் புறா பந்தய கிளப் தலைவர் நாராயணன், செயலாளர் ராஜ், பொருளாளர் சின்னத்துரை செய்திருந்தனர்.

Related Stories: