×

பெரியபாளையத்தில் தூர்ந்து கிடக்கும் குடிநீர் கிணறு

ஊத்துக்கோட்டை, பிப். 19: பெரியபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகில் தூர்ந்து கிடக்கும் குடிநீர் கிணற்றை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில்  அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் விவசாயிகள், மாணவ, மாணவிகள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது  ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுக்கு முன்பு இப்பகுதி மக்கள் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிணறு கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது கிணறு தூர்ந்துவிட்டதால் உடனே தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ பெரியபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகில் தற்போது தூர்ந்துவிட்ட நிலையில் உள்ள கிணற்றில் இருந்து தான் 60 ஆண்டுக்கு முன்பு தண்ணீர் எடுத்து குடித்து வந்தோம். இந்த கிணற்றை யாரும் பயன்படுத்தாததால் குப்பைகள் கொட்டப்பட்டு தற்போது தூர்ந்துவிட்டது.  இந்த கிணற்றில் தண்ணீர் இருக்கும்போது  இதை சுற்றியுள்ள வீடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இந்த கிணறு தூர்ந்து விட்டதால் கடந்த ஆண்டு கோடைகாலத்தில் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது. எனவே தூர்ந்து விட்ட கிணற்றை தூர்வார வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...