×

விவசாய கடன் அட்டை சிறப்பு முகாம்

காஞ்சிபுரம், பிப்.19: விவசாயிகளுக்கான விவசாய கடன் பெறுவதற்கான அட்டை சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக , காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அசோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. பிரதமரின் கிசான் திட்ட விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெற்று பயனடைய அனைத்து வங்கி கிளைகளிலும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விவசாய கடன் அட்டை பெற்று பயனடையலாம்.பிரதமரின் கவுரவ உதவித்தொகை திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு கடந்த 14ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படும். இந்த கடன் அட்டை மூலம் அதிகபட்ச கடன் தொகையாக 1.6 லட்சம் ஜாமீன் இல்லாமல் பெறலாம்.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள், விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க இந்த நிதி உதவும். இதனை, 3 சதவீதம் வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் இந்த முகாம் நடைபெறும். கடன் அட்டை பெற கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், ஆதார் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் வந்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Special Camp ,
× RELATED விவசாயக் கடன் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்