×

போலீஸ் அனுமதி தர மறுத்த நிலையில் இன்று கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, பிப்.19: திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நடைபெறும் எந்த போராட்டத்துக்கும் அனுமதியில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.மேலும், போராட்டங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரித்து அனுப்புமாறு தனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், போராட்ட வியூகம், இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை இன்று(புதன்) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அனைத்து மஹல்லா ஜமாத் இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவோரை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால், பரபரப்பு அதிகரித்துள்ளது.‘

Tags : Collector ,office ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...