பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் பாழடைந்து கிடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் இடித்து அகற்றம்

அணைக்கட்டு, பிப்.19: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் பாழடைந்து கிடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றி ₹9 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது. இதில் இரு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பள்ளி அருகே அங்கன்வாடி மையத்திற்கு புது கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலை இருந்தது. இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றபட்டது.அவ்வாறு மாற்றப்பட்ட கட்டிடத்தில் குழந்தைகள் விளையாட, கல்வி கற்க போதிய இடவசதியில்லாத காரணத்தினால் சிரமப்பட்டு வந்தனர். இதனால், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றி, புது கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, எம்எல்ஏ நந்தகுமார், அங்கு புது அங்கன்வாடி மையம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹9 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இருப்பினும் பணிகள் தொடங்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையறிந்த எம்எல்ஏ நந்தகுமார் கடந்த 16ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், ஒப்பந்ததாரரை அழைத்து மையம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று சேதமடைந்த பழயை அங்கன்வாடி மைய கட்டிடம் ஜேசிபி மூலம் முழுவதும் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, புது கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: