×

குடிநீர் கேட்வால்வு தொட்டியில் புழு உற்பத்தி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

வெள்ளகோவில், பிப். 19:   வெள்ளகோவிலில் குடிநீர் குழாய் கேட்வால்வு தொட்டியில் தேங்கிய நீரில் புழுக்கள் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு பரப்புமேடு பகுதியில் உள்ள குடிநீர் குழாய் கேட்வால்வு தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் நீர் கசிந்து தண்ணீர் தேங்கி இருந்ததால் குப்பை மற்றும் புழுக்கள் உற்பத்தியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொட்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தொட்டியை சுத்தம் செய்து கேட்வால்வின் நீர் கசிவை சரி செய்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனே கலைந்து சென்றனர்.

Tags : road ,public ,
× RELATED தாம்பரம்- சின்னமலை இடையே மந்தகதியில்...