×

பல்லடம் அருகே பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளை


பொங்கலூர், பிப். 19:   பல்லடம் அருகே பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ஆலூத்துப்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன். இவர் வீட்டின் கீழ்பகுதியில் சொந்தமாக பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். வீட்டு மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சுந்தரேஸ்வரன் குடும்பத்தினருடன் மாடியில் தூங்கியுள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகை மற்றும் தடயங்களையும் சேகரித்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் காணமாமல் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து சுந்தரேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில அல்லது தென் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Robbery ,owner ,Palladam ,Banyan Export Company ,
× RELATED பல்லடம் வங்கிக்கொள்ளை தொடர்பாக மேலும் ஒரு கொள்ளையன் ராஜஸ்தானில் கைது