×

காஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், பிப். 19:   காஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்  திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு நடந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமை வகித்து பேசும்போது, மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உயர்த்தப்பட்ட காஸ் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். முன்னதாக சாலையில் விறகு அடுப்பு மூட்டி சமையல் செய்யும் போராட்டம், காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தாராபுரம் நகர தலைவர் செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பிரணீஸ் பாலு, மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மாலதி, மாவட்ட தலைவர் தனலட்சுமி, மாநில மனித உரிமை பிரிவு செல்வராணி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,gas price hike ,
× RELATED சென்னையில் வீட்டு உபயோக சமையல்...